பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருக்கும் Eiffel Tower இல் ஆடையின்றி இளைஞன் ஏறியதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடை அணியாத அந்த இளைஞன், உள்ளூர் நேரப்படி, நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் 330 மீட்டர் உயரங்கொண்ட கோபுரத்தில் ஏறிக்கொண்டிருந்தார்.
ஒலிம்பிக் வளையங்களுக்கு மேல் அதாவது கோபுரத்தின் முதல் தட்டுக்கு மேல் இளைஞன் ஏறியமை அவதானிக்கப்பட்டது. இதனையடுத்து கோபுரத்தைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்த மக்களை பொலிஸார் அவசரமாக வெளியேற்றினர்.
ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழாவுக்கு முன்னர் அந்தச் சம்பவம் நேர்ந்ததால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது. ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் Eiffel Tower கோபுரத்துக்குப் பங்கு இல்லை என்றாலும் நிகழ்வின் தொடக்க விழாவில் Eiffel Tower முக்கிய பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.