குரங்கம்மைத் தொற்றை (mpox) உலகப் பொதுச் சுதாதார நெருக்கடியாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அறிவித்துள்ளது.
இப்படி அறிவிக்கப்படுவது ஈராண்டில் இது இரண்டாவது முறை ஆகும். மத்திய ஆப்பிரிக்க நாடான கோங்கோ பெரிய அளவில் mpox நோய்ப் பரவலைச் சந்திக்கிறது.
அந்த அம்மை நோய் பக்கத்து நாடுகளுக்கும் பரவி வருவதால் உலக சுகாதார ஸ்தாபனம் அஞ்சுகிறது. பொதுச் சுகாதார நெருக்கடி அறிவிக்கப்பட்டால் நோய் குறித்த ஆய்வு தீவிரம் அடையும். பணம் திரட்டுவதும், நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளும் விரைவுபடுத்தப்படும்.
உயிர்களைக் காப்பாற்றவும் நோய்ப்பரவலைத் தடுக்கவும் அனைத்துலக அளவில் ஒன்றுசேர்ந்து செயல்படுவது அவசியம் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது குரங்கம்மை பரவக்கூடும் என அஞ்சப்படுகின்றது.