கனடாவில் வசிக்கும் வெளிநாட்டு மாணவர்களால் ஓன்டாரியோ, மானிடோபா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா உள்ளிட்ட பல மாகாணங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி முதல் அமலுக்கு வரவுள்ள அரசின் புதிய திட்டத்தை எதிர்த்தே வெளிநாட்டு மாணவர்களால் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
கனடாவுக்கு வரும் 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது, 25 சதவீதம் வரை நிரந்தரக் குடியிருப்பு அனுமதியைக் குறைப்பது, படிப்பதற்காக மாணவர்கள் பெர்மிட், வேலைக்கான பெர்மிட் பெறுவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களை கனேடிய அரசு அமுல்படுத்தவுள்ளது.
இதன்படி, கடனாவில் மக்கள் தொகை அதிகரிப்பு, கனேடியர்களுக்கு வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் தற்காலிக வேலைகளுக்காக அதிகளவில் குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
கனேடிய இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராளுமன்றத்தில் நேற்று முன் தினம் அறிவித்தார்.
இந்தத் திட்டங்களால் கனடாவில் படித்து வரும் 70,000 வெளிநாட்டு மாணவர்களில் பலரின் பெர்மிட் இந்த வருட இறுதிக்குள் முடிவடைய உள்ள நிலையிலே அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் அதிக எண்ணிக்கையில் இருப்பது இந்திய மாணவர்களே ஆவர். எனவே, ஜஸ்டின் ட்ருடோ அரசின் இந்த முடிவை எதிர்த்து வெளிநாட்டு மாணவர்கள் பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.