பிலிப்பீன்ஸில் வீசிய சூறாவளியில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
“Yagi” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளியால் பிலிப்பீன்ஸ் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், பல விமானச் சேவைகளும் தடைப்பட்டுள்ளன.
பிலிப்பீன்ஸின் கிழக்குப் பகுதியில் கனத்த மழை பெய்தது, வெள்ளமும் ஏற்பட்டது.
சூறாவளியால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். குறைந்தது நான்கு வட்டாரங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தற்காலிகத் தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்கிழக்காசியாவில் சூறாவளியால் அதிகம் பாதிக்கப்படும் நாடு பிலிப்பீன்ஸ் ஆகும். பிலிப்பீன்ஸில் ஆண்டுதோறும் சுமார் 20 சூறாவளிகள் வீசுவது வழக்கம்.