அமெரிக்க பிரபல நிறுவனமான Apple தனது புதுரக iPhone 16 அலைபேசிகளை, எதிர்வரும் 20ஆம் திகதி முதல் கடைகளில் விற்பனைக்கு விடுகின்றது.
அவற்றை வாங்குவதற்கு நாளை மறுதினம் (13) முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம் என Apple நிறுவனம் அறிவித்துள்ளது.
Apple நிறுவனம், நேற்று முன்தினம் (09) நடத்திய வெளியீட்டு நிகழ்ச்சியில் iPhone 16 ரகங்கள், Apple கைக்கடிகாரம், Airpods ஆகியவற்றை அறிமுகம் செய்தது.
புதிய iPhone 16 அலைபேசிகளில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப அம்சங்கள் இருக்கும் என்றும் Apple நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, Apple நிறுவனத்தின் போட்டியாளரான Huawei நிறுவனம், அதன் புதுரகத் அலைபேசியை நேற்று (10) சீனாவில் அறிமுகம் செய்தது.