2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க இருக்கின்றது.
வட்டி விகிதம் அடுத்த வாரம் குறைக்கப்படும் என்றே பரவலாக நம்பப்படுகிறது. எனினும், எவ்வளவு குறைக்கப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அமெரிக்காவில் பணவீக்கம் மூன்று ஆண்டில் ஆகக் குறைவான விகிதத்தைத் தொட்டிருக்கிறது. கடந்த ஓகஸ்ட் மாதத்தில் பயனீட்டாளர் விலைக் குறியீடு இரண்டரை சதவீதம் உயர்ந்தது. எரிவாயு விலை குறைந்தது அதற்குக் காரணமாக இருந்தது.
இதனையடுத்தே, அடுத்த வாரம் அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கு அது வகைசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உணவு, எரிசக்தி போன்ற ஏற்ற இறக்கம் கொண்ட பொருள்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஆண்டு அடிப்படையில் விலையேற்றம், மூன்று சதவீதத்தை விட சற்று அதிகம் ஆகும்.