அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இருதரப்பிலும் பரபரப்பாக முன்னெடுக்கப்படுகின்றன.
தன்னுடைய சிறு வயதில் McDonald’s உணவகத்தில் வேலை பார்த்த அனுபவம் தனக்கு உண்டு என்று, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் பிரசார உரையொன்றில் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வாக்குச் சேகரித்த வேட்பாளர் டிரம்ப், அங்குள்ள McDonald’s உணவக ஊழியரைப் போன்று செயல்பட்டார். டிரம்ப் சிறிது நேரம் McDonald’s உணவக ஊழியராகவே மாறி அவர்கள் போல் வேலை செய்தார். அவர், உருளைக் கிழக்கு நறுக்குகளை எண்ணெயில் வறுத்தெடுத்துப் பைகளில் போட்டுக் கொடுத்தார் டிரம்ப்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணயத்தில் வைரலாகி வருகின்றன.
60ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் கமலா ஹாரிஸுக்கும் கொஞ்சம் உருளைக் கிழக்கு நறுக்குகளைக் கொடுக்க விரும்புவதாக வேடிக்கையாக இதன்போது டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள இரு தேவாலயங்களில் பிறந்தநாளைக் கொண்டாடினார் ஹாரிஸ். நற்செய்திப் பாடல்களைப் பாடி அவர் வாக்குச் சேகரித்தார்.
அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல், எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.