ஸ்பெயினில், வெலன்சியா வரலாறு காணாத கன மழை வெள்ளத்தை சந்தித்திருக்கிறது. “டானா” என்று சொல்லப்படும் வானிலை வெலன்சியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
கடுமையான வெள்ளம் காரணமாக குறைந்தது 158 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காணாமால் போயுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஸ்பெயின் மூன்று நாள் தேசிய துக்கத்தை அனுசரித்து வருகிறது. அரசாங்கக் கட்டடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது.
தலைநகர் மட்ரிடில் மன்னன் ஃபெலிப்பே, மரணித்தவர்களுக்கான ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தினார்.
அதிகம் பாதிக்கப்பட்ட வெலன்சியா வட்டாரத்திற்கு பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் கள விஜயம் மேற்கொண்டு நிலமைகளை ஆராய்ந்தார்.
இதேவேளை, ஸ்பெயின் அரசாங்கத்தை எதிர்த்தரப்புகள் குறைசொல்கிறன. முன்கூட்டியே மக்களை எச்சரித்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்று எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர்.