ஸ்பெயின், வலன்சியா நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து துக்கம் விசாரிக்க சென்ற மன்னர் ஃபெலிப்பே மீது கடும் கோபம் கொண்டு, அவர் மீது சேற்றை வீசி மக்கள் விரட்டியுள்ளனர்.
சேற்றை வீசி, அவரைத் திட்டி அங்கிருந்து கிளம்பும்படி மக்கள் கூச்சலிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
எனினும், 4 நாள்களாகத் தொடரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிவதாக மன்னர் ஃபெலிப்பே கூறினார். அத்துடன், மக்களின் கோபத்தையும் ஏமாற்றத்தையும் தம்மால் புரிந்துகொள்ள முடிவதாக அவர் தெரிவித்தார்.
ஸ்பெயினில் ஏற்பட்டு கடுமையான வெள்ளத்தால் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல்போயுள்ளனர்.
தொடர்புடைய செய்தி : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்பெயின் மக்களுக்கு விமானப்படை நம்பிக்கை அளித்தது!
பல நகரங்கள் நீரில் மூழ்கிய பிறகுதான் அரசாங்க அதிகாரிகள் எச்சரிக்கைகளை விடுத்ததாகக் குறை கூறப்படுகிறது.
இதேவேளை, கொந்தளித்த மக்கள் கூட்டத்திலிருந்து ஸ்பானியப் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மீட்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் நடத்தப்பட்ட அதிகாரத்துவச் சந்திப்பில் அவர் பேசினார். மக்கள் வன்முறையைக் கையில் எடுப்பதை தாம் ஆதரிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். அதேநேரத்தில் மக்களின் அவல நிலையைப் புரிந்துகொள்வதாகவும் பிரதமர் கூறினார்.
ஸ்பெயினில் வெள்ளம் தொடங்கியதிலிருந்து மக்களுக்குக் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
தொடர்புடைய செய்தி : வரலாறு காணாத கன மழை வெள்ளத்தை சந்தித்த ஸ்பெயின்!