இங்கிலாந்தில் பெர்ட் புயல் வீசியதில் கார் மீது மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெர்ட் புயல் பலத்த காற்று, மழை மற்றும் பனியைக் கொண்டு வந்து இங்கிலாந்து முழுவதும் இடையூறு ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சனிக்கிழமை வின்செஸ்டர் (Winchester) அருகே A34 இல் தனது காரில் மரம் மோதியதில் 60 வயதுடைய ஒருவர் இறந்துவிட்டதாக ஹாம்ப்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர்.
பெர்ட் புயல் காரணமாக இங்கிலாந்தில் ரயில் மற்றும் விமானப் பயணங்களில் கால தாமதங்கள் மற்றும் இரத்துகள் ஏற்பட்டன.
அத்துடன், ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் இல்லாமல் போயுள்ளது.
இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து முழுவதும் மழை மற்றும் காற்றுக்கான மஞ்சள் வானிலை எச்சரிக்கைகள் மற்றும் வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் பனிப்பொழிவு காரணமாக பல வீதிகள் மூடப்பட்டுள்ள அதேசமயம் வடக்கு ரயில் மற்றும் அவந்தி வெஸ்ட் கோஸ்ட் உட்பட பல ரயில் நிறுவனங்கள் ரயில் சேவைகளை இரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.