பல்வேறு உணவு வகைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சிவப்புச் சாயம் அமெரிக்காவில் தடை செய்யப்படலாம்.
அடுத்த சில வாரங்களில் Red 3 எனப்படும் அந்தப் பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்று அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அது பெட்ரோலியத்திலிருந்து எடுக்கப்படுகிறது. செர்ரி பழம் போன்ற சிவப்பு நிறத்தை உணவில் கொண்டுவர அது பயன்படுத்தப்படுவதாக The Guardian செய்தி நிறுவனம் கூறியது.
Red 3 சுமார் 3,000 உணவுப்பொருள்களில் உள்ளதாகச் சுற்றுப்புற, சுகாதார அமைப்பு குறிப்பிட்டது.
அதில் ஊட்டச்சத்து ஏதும் இல்லை என்றும் The Guardian சுட்டிக்காட்டுகிறது.
சரியாகப் பயன்படுத்தினால் அதை உட்கொள்வது பாதுகாப்பானதே என்று ஆணையம் தெரிவித்தது. ஆனால், அது விலங்குகளில் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது.
1990ஆம் ஆண்டு முதல் அதை முக அலங்காரப் பொருள்களில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கலிபோர்னியா மாநிலம், Red 3 சாயத்தைத் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.