இங்கிலாந்தில் 10 வயது சிறுமியை அவரது 42 வயது தந்தையான உர்பான் ஷரிப் மற்றும் 30 வயது மாற்றந்தாய் பெய்னாஷ் பதூல் ஆகிய இருவருமே கொலை செய்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 29 வயது மாமா பைசல் மாலிக் சிறுமியின் மரணத்துக்குக் காரணமாக இருந்தார் அல்லது கொலை நடப்பதை அனுமதித்தார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, குறித்த மூவருக்கும் அடுத்த வாரம் தண்டனை விதிக்கப்படவுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு 10 வயது சாரா ஷரிப் லண்டனில் உள்ள அவரின் வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
அவரின் உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மூவரும் லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்குத் தப்பிவிட்டனர். ஒரு மாதம் கழித்து மூவரும் இங்கிலாந்துக்குத் திரும்பிய பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தந்தை ஷரிப், மகளைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். சாரா உடலில் சுமார் 25 எலும்புகள் உடைந்திருந்தமை பிரேதப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. சிறுமியின் உடலில் 100க்கும் அதிகமான காயங்களும் இருந்தன.
அந்தச் சம்பவம் இங்கிலாந்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உலகெங்கும் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.