குரல் ஒன்று மட்டுவில் மலர்ந்தது
திரள் ஒன்று கண்டது போரில்
வறல் நிலத்தின் முத்து இது
வன்னியினை காத்த சொத்து இது
தாய்க்கு தெரியவில்லைதான் சுமப்பது
கருவை அல்ல மாறாக
ஆதி தொட்ட தமிழனின்
குரல் நெருப்பை என்று
புலர்ந்தது தேசம் எனினும்
அவன் மறக்கவில்லை
தன் தமிழரின் நேசத்தை
கண்டான் கற்றான் எழுதினான்
வந்தான் ஒலித்தான்
தேசத்தின் குரலாக
பிழையெனில் பிள்ளை கொள்ளும் வீரம்
அவனையும் விட வில்லை
விமர்சித்தான் திம்புவில்
விடுதலை நெருப்புகளின் ஆடம்பரத்தை !
இணைந்தான் தாதிய வெண் சிலையோடு
புனைந்தான் பல வெற்றி தைகள் அவளோடு
அடேலின் அன்பிற்க்கு உரியவன் இவன்
அழுகின்ற வாய்களுக்கு உரிய குரலும் இவன்
குமரியின் எச்சத்தினை 
கூவித்திருந்த குயில் இவன்
சாய்ந்த இலைகள் சலனத்துக்கு அஞ்சுவதில்லை
மாய்ந்த இவன் குரலும் !
*18 வருட நினைவு அஞ்சலி !
-அன்பில் டனுஷன்