ஞாயிற்றுக்கிழமை காலை ரீஜண்ட் கால்வாயில் கண்டுபிடிக்கப்பட்ட சடலத்தின் அடையாளத்தை கண்டறியும் பணியில் மெட் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சடலம் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து, உடனடியாக அதிகாரிகளால் ஆணின் சடலம் மீட்கப்பட்டது.
அதிகாரிகள் இன்னும் உடலை முறையாக அடையாளம் காணவில்லை, இதன் விளைவாக அந்த நபரின் உறவினரை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை.
காலை 10 மணியளவில் இலண்டன் மிருகக்காட்சிசாலையில் இருந்து சற்று தொலைவில் உள்ள சாக் ஃபார்மில் உள்ள கால்வாயின் பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
“டிசம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில், சாக் ஃபார்மில் உள்ள ரீஜண்ட்ஸ் கால்வாயில் ஒரு ஆணின் சடலம் உள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டது” என, ஒரு மெட் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.