வூல்விச்சில் பஸ்ஸில் பதின்ம வயது சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்டான் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று செவ்வாய்கிழமை (07) பிற்பகல் 2.28 மணியளவில் வூல்விச் சர்ச் வீதியில் 472 ஆம் வழித்த பஸ்ஸில் குறித்த சிறுவன் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த 14 வயது சிறுவனுக்கு மருத்துவ உதவியாளர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால், மருத்துவர்கள் வந்த சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
இலண்டன் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் இலண்டனின் ஏர் ஆம்புலன்ஸ் உடன் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை கண்காணிப்பாளர் லூயிஸ் சார்ஜென்ட், “மருத்துவர்கள் வந்த சிறிது நேரத்தில் சிறுவன் இறந்துவிட்டான்” என்றார்.
“ஆரம்ப கட்டத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான வேகத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.