அமெரிக்கா – கலிபோர்னியா மாநிலத்தில் கட்டுக்கடங்காமல் பரவிய காட்டுத் தீ அனைத்தையும் தீக்கிடையாக்கியது.
எனினும், மாலிபு நகரில் உள்ள குடியிருப்பு வட்டாரத்தில் ஒரு வான் மட்டும் தீயிலிருந்து அதிசயமாகத் தப்பியுள்ளது. காட்டுத் தீயின் பாதையில் இருந்த அனைத்தும் தீக்கிரையாகியபோதும், குறித்த வானுக்கு மாத்திரம் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
இதனை Mark J. Terrill எனும் புகைப்பட ஊடகவியலாளர் அர்த்தமிக்க வகையில் புகைப்படம் எடுத்துள்ளார். அவர் எடுத்த படம் பலரது கவனத்தையும் ஈர்த்து, சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்படுகிறது.
குறித்த காரின் உரிமையாளரான பிரேஸ்டன் மார்டின் கருத்துரைக்கையில், “அழிவுக்கு இடையே பளபளவென்று மின்னும் கார் நிற்பது… மக்களுக்கு ஒரு வகை நம்பிக்கை அளிக்கிறது. அதுவே எனக்கு மகிழ்ச்சி” என்றார்.
காரைக் கண்டவுடன் தாம் அதிர்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சியடைந்நதாகவும் அவர் தெரிவித்தார்.
“வானில் ஏதோ மந்திரம் உள்ளது. அது தீயில் பொசுங்கியிருந்தால் பரவாயில்லை. இது எப்படி நடந்தது?” என்றும் காரின் உரிமையாளரான பிரேஸ்டன் மார்டின் வியப்புடன் தெரிவித்தார்.