செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு இறக்கும் நோயாளிகள்; கேள்விக்குறியாகும் இங்கிலாந்தின் சுகாதாரத் துறை!

இறக்கும் நோயாளிகள்; கேள்விக்குறியாகும் இங்கிலாந்தின் சுகாதாரத் துறை!

1 minutes read

இங்கிலாந்தின் வைத்தியசாலைகள் பலவற்றில் இட நெடிக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால் சில வைத்தியசாலைகளின் வாகன தரப்பிடங்கள் மற்றும் குளியலறை உள்ளிட்ட பகுதிகள் நோயாளிகளுக்கான தற்காலிக இடங்களாக மாற்றப்பட்டுள்ளதாக ராயல் நர்சிங் கல்லூரி தெரிவித்தது.

அத்துடன், ஓக்ஸிஜன், இதய கண்காணிப்பு கருவிகள் மற்றும் உறிஞ்சும் கருவிகள் போன்ற முக்கிய உபகரணங்களை செவிலியர்களால் அணுக முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. கடந்த வாரம் மட்டும் 20க்கும் மேற்பட்ட NHS அறக்கட்டளைகள் இவ்வாறான நெருக்கடி நிலையை அறிவித்துள்ளன.

மேலும், சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகள் நடைபாதையிலேயே இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவசர சிகிச்சை அளிக்க ஏற்படும் தாமதம் காரணமாக நோயாளிகள் மாரடைப்பால் இறக்கிறார்கள் என்றும், ஒரு செவிலியர் மட்டுமே பலரையும் கவனிக்கும் நிலை இருப்பதால் காத்திருப்பு அறைகளில் தள்ளுவண்டிகள் மற்றும் நாற்காலிகளில் பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் ராயல் நர்சிங் கல்லூரி நிர்வாகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைகளைப் பொறுத்துக்கொள்ளக் கூடாது என்று தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங், கடந்த அரசாங்கத்தின் மீது பழி சுமத்தியுள்ளார்.

இதேவேளை, இவ்வாண்டின் தொடக்கத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 5,400ஆக இருந்த காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் சராசரியாக 5,000க்கு குறைந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More