வடமேற்கு இலண்டன் தேவாலயத்திற்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று ஆண்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
டிசெம்பர் 14 அன்று இரவு 9 மணியளவில் தேவாலயத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த 44 வயதான மிச்செல் சாடியோ சுடப்பட்டார்.
அத்துடன், இந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர். 39 வயதான கென்னத் அமோஹ் முதுகில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் அடைந்ததுடன், கதீம் பிரான்சிஸ், 30, காலில் சுடப்பட்டார்.
இதனையடுத்து, பெர்ரி ஆலன்-தாமஸ், 26, அமீர் சேலம், 18, ஷாகில் சதர்லேண்ட், 24 ஆகிய சந்தேகநபர்கள் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வெம்ப்லியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள், வெள்ளிக்கிழமை வில்லெஸ்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் காவலில் வைக்கப்பட்டனர்.