தென் கொரியாவில் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி யூன் சுக் இயோல் முதல்தடவையாக அரசியல் குற்றச்சாட்டு விசாரணைக்கு முகங்கொடுத்துள்ளார்.
இதற்கு முன்னர் இடம்பெற்ற விசாணைக்கு வருகை தர அவர் மறுத்திருந்தார்.
கடந்த மாதம் இராணுவச் சட்டத்தை அறிவித்த யூன் சுக் இயோலை ஜனாதிபதி பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்குவது குறித்து நீதிபதிகள் முடிவெடுக்க உள்ளனர்.
தொடர்புடைய செய்தி : அரசியல் குற்றச்சாட்டு விசாரணையை எதிர்நோக்கும் தென்கொரிய ஜனாதிபதி திடீர் கைது
இராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டபோது நாடாளுமன்றத்தில் இருந்த ஏனைய உறுப்பினர்களை வெளியே இழுத்துச் செல்லும்படி இராணுவத்துக்குத் தாம் உத்தரவிடவில்லை என குறித்த விசாரணையின் போது யூன் சுக் இயோல் தெரிவித்தார்.
அத்துடன், எதிர்த்தரப்பு ஜனநாயகக் கட்சி குறித்து எச்சரிக்கை விடுக்கவே இராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், அக்கட்சி அரசாங்கத்தை முடக்க முற்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.