அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் 2 தனியார் ஜெட் விமானங்கள் மோதி கொண்டன.
இந்த விபத்தில் ஒருவர் பலியானதுடன், பலர் காயமடைந்தனர். ஒருவர் விமானத்தில் சிக்கியுள்ளார். இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த விமான நிலையத்தில் இருந்து சில மைல்கள் தொலைவில் அமைந்துள்ள, கோல்ப் மைதானத்தில் வார இறுதி நாட்களில் கோல்ப் போட்டி தொடர் நடைபெறும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
நடுத்தர அளவிலான ஜெட் விமானம் ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு ஜெட் விமானம் மீது மோதி விபத்தில் சிக்கியதாக மத்திய விமான போக்குவரத்து துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளதுடன், விமான நிலையம் மூடப்பட்டு உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் வர்த்தக ஜெட் விமானம் மற்றும் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று மோதி கொண்டதில் 67 பேர் உயிரிழந்தனர்.