‘ஜோ’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் ரியோ ராஜ் நடித்திருக்கும் ‘ஸ்வீட்ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ ஆஸம் கிஸா..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்வீட்ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
கொமடி வித் ரொமான்டிக் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை வை எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் முதல் தோற்ற பார்வை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ‘ ஆஸம் கிஸா..’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர்கள் கெலி தீ மற்றும் கானா ஃபிரான்ஸிஸ் ஆகியோர் எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான யுவன் சங்கர் ராஜா மற்றும் ஆஃப்ரோ ஆகிய இணைந்து பாடியிருக்கிறார்கள்.
மேலத்தேய தாள லய பின்னணியில் கானா பாடலாக உருவாகி இருக்கும் இந்தப் பாடல்… இளைஞர்களின் கொண்டாட்ட பாடலாக மாறியிருப்பதால், அனைத்து தரப்பு இசை ரசிகர்களிடமும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றிருக்கிறது.