லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்தபோது இலங்கைப் பாடகி யோஹானி டி சில்வாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் குழுவால் இந்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடகி யோஹானி முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் மகள் என்பதுதான் இதற்குக் காரணமாக உள்ளது.
‘பிரசன்ன டி சில்வா இனப்படுகொலை குற்றவாளியான போர்க்குற்றவாளி”, “அவரைப் புகழ்ந்து பேசுபவர்கள் அவரது குற்றங்களை மூடிமறைக்க முயற்சிக்கிறார்கள்” என்று எதிர்ப்பு வெளியிட்ட நபர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இலங்கைப் பாடகி யோஹானி டி சில்வா, ‘மணிகே மாகே ஹிதே’ என்னும் சிங்கள பாடலை youtube தளத்தில் வெளியிட்டதன் மூலம் உலகளவில் பிரபலமானவர்.