நாட்டில் சில மாவட்டங்களில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இவ்வாறு வெப்பக்குறியீடு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புத்தளம், குருணாகல், கம்பஹா, கேகாலை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்றும் அதிக வெப்பநிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலையால் உடலில் ஏற்படக் கூடிய பாதிப்புக்களைத் தவிர்த்துக் கொள்வதற்காக போதிளவு நீரை அருந்துமாறும், அநாவசியமாக வெளியிடங்களுக்கு செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.