தனது தாய் மற்றும் உடன்பிறந்தவர்கள் இருவரைக் கொன்ற நிக்கோலஸ் ப்ரோஸ்பெர் என்ற 19 வயது இளைஞன், தனது முன்னாள் ஆரம்ப பாடசாலையில் பாரிய துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிட்டிருந்ததை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்தாண்டு செப்டெம்பர் மாதம், இங்கிலாந்தின் Luton நகரில் உள்ள வீடொன்றில் தாயார் ஜூலியானா ஃபால்கன் (வயது 48), உடன் பிறந்தவர்களான கைல் ப்ரோஸ்பெர் (வயது 16) மற்றும் ஜிசெல்லே ப்ரோஸ்பெர் (வயது 13) ஆகியோரை நிக்கோலஸ் ப்ரோஸ்பெர் சுட்டுக் கொன்றார்.
Luton Crown நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (24) அவர் குறித்த மூன்று கொலை வழக்குகளில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அத்துடன், குறித்த இளைஞன் தான் உட்பட தனது உடன் பிறந்தவர்கள் கல்வி கற்ற ஆரம்ப பாடசாலையின் தாக்குதல் நடத்த எண்ணியிருந்தான் என்றும், 30க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் ஏற்றப்பட்ட துப்பாக்கி ஒன்று அவர் கைது செய்யப்பட்ட பின்னர் ஒரு புதரிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக Luton நகர் பொலிஸார் தெரிவித்தனர்.
“அதிர்ஷ்டவசமாக ப்ரோஸ்பர் மேலும் தீங்கு விளைவிப்பதற்கு முன்பே கைது செய்யப்பட்டார். இது ஓர் உண்மையான சோகமான மற்றும் அதிர்ச்சியூட்டும் வழக்கு. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அப்பாவி உறுப்பினர்கள் தங்கள் மகன் மற்றும் சகோதரரால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்” என்று Luton நகர் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், “எங்கள் விசாரணையில் பின்னர் வெளிவந்த, பாடசாலையில் தாக்குதலை நடத்துவதற்கான அவரது நோக்கத்தில் எந்த சந்தேகமும் இல்லை” என்றும் Luton நகர் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், “லூடனில் உள்ள செயின்ட் ஜோசப் கத்தோலிக்க தொடக்கப் பள்ளியை குறிவைக்கும் அவரது திட்டத்தை அறிந்ததும், அவரது குழு “அதிர்ச்சியிலும் அவநம்பிக்கையிலும்” இருப்பதாகவும் கூறினர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞன்