நகைச்சுவை நடிகராக பிரபலமாகி கதையின் நாயகனாக உயர்ந்திருக்கும் சந்தானம் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டி டி வேற லெவல்’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கிசா 47’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ டி டி வேற லெவல்’ எனும் திரைப்படத்தில் சந்தானம், கீதிகா , செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் , நிழல்கள் ரவி , கஸ்தூரி , ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் , மொட்டை ராஜேந்திரன், மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். காமெடி ஹாரர் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தி ஷோ பீப்பிள் மற்றும் நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருக்கிறது.
கோடை விடுமுறை மாதமான எதிர்வரும் மே மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கிசா 47’ எனும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் கெலிதி எழுத , பின்னணி பாடகரும் , இசையமைப்பாளருமான ஆஃப்ரோ பாடியிருக்கிறார்.
பக்தி இசையில் பிரபலமான பாடலையும், றாப் இசையையும் கலந்து உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த பாடல் ஒரு தரப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் இந்தப் பாடலில் உரையாடலும் இணைக்கப்பட்டிருப்பதால் ரசிக்க முடிகிறது.