சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமான பாராசாக்தி படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் இலங்கையில் நடைபெறவுள்ளதாக நடிகர் ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி என அமைக்கப்பட்ட ) தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் பராசக்தி படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார்.
சூரரை போற்று படம் ஏற்படுத்திக் கொடுத்த மிகச்சிறப்பான என்ட்ரியை தொடர்ந்து அவரது இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. முன்னதாக இந்தப் படத்தில் சூர்யா இணைந்திருந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
படத்தில் ரவி மோகன் வில்லனாகியுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் மதுரை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இதை இயக்குநர் சுதா கொங்கரா உறுதி செய்துள்ளார்.
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட நிலையில் மதுரை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் சுதா கொங்கரான உற்சாகம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து படக்குழுவினர் இரண்டாவது கட்ட படப்பிடிப்புக்காக விரைவில் இலங்கைக்கு வரகை தரவுள்ளனர். இந்த தகவலை நடிகர் ரவி மோகனும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாகவும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் 100வது படமாகவும் உருவாகி வருவது சிறப்பாக பார்க்கப்படுகிறது.