தமிழின் பிரபலமான நட்சத்திர நடிகர்களான ஆர்யா – கௌதம் ராம் கார்த்திக் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஹய்யோடி..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மிஸ்டர் எக்ஸ்’ எனும் திரைப்படத்தில் ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, ரைசா வில்சன், அதுல்யா, ஜெயப்பிரகாஷ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு திபு நினன் தோமஸ் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் டீசர் வெளியாகி இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ஹய்யோடி தகராறு ஆகுதே…. பார்த்தாலே கிறுக்கு ஏறுதே..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது . இந்த பாடலை பாடலாசிரியர் கிருத்திகா நெல்சன் எழுத, பின்னணி பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார். வசீகரிக்கும் மெட்டு – இளமை ததும்பும் பாடல் வரிகள்- மயக்கும் பின்னணி குரல் – என இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதால்.. இந்தப் பாடல் அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.