கடந்த வார இறுதியில் உக்ரேன் ஜனாதிபதி, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து ஐரோப்பாவின் பாதுகாப்பை வலுப்படுத்தக் கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, பாதுகாப்பை பலப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம்
திட்டம் வகுத்துள்ளது.
அதன்படி, ஐரோப்பிய ஒன்றியம் அதன் பாதுகாப்புக்கு 840 பில்லியன் டொலர் திரட்டும் ஐந்து அம்சத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
உறுப்பு நாடுகளுக்கு உதவும் அந்த நிதி உடனடித் தேவையுள்ள உக்ரேனுக்கும் கைகொடுக்கும் என்று ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயென் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி : உக்ரேனுக்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா நிறுத்துவதாக தகவல்!
உக்ரேனுக்கான எல்லா இராணுவ உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. அமைதிக்கான நன்னம்பிக்கையை உக்ரேனியத் தலைவர்கள் உறுதிப்படுத்தினால் அமெரிக்க உதவி மீண்டும் தொடர வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.