நேற்றொரு நாளில்
நாற்று இட்டு முளைத்த
விடுதலைப் போர்
எரிதணலில் வாடியது.
அது கண்டு கலங்கி
காத்திட துடித்து
துணிந்த சிலரும்
ஈழமண்ணில் உண்டு.
போரின் பாதைகளை
கண்டு நடத்தி சென்ற
தலைவன் எடுத்த முடிவுகள்
போரை காத்திட
மற்றொரு பக்கத்தில்
அன்னையர் முன்னனி
மட்டு மண்ணில்
எடுத்த முயற்சியும் உண்டு.
அமைதிப்படை என்று
ஈழமண்ணில் தன்
கால்பதித்து விட்ட- இந்திய
இராணுவம் செய்தது.
தம்பி என்று நம்பிய
மூத்தோரைக் கொன்றது.
மகனே என்ற அன்னையரை
சீரழித்து கொன்றது.
பாரத மாதா என்று
பெண்ணுக்கு ஒப்பிட்டு
தன் நாட்டை போற்றும்
அந்த மாந்தர் செய்தார்.
ஈழ மங்கையரை
சீரழித்து கொன்றார்.
சின்னா பின்னமாக்கி.
அழுது நாம் முடித்தோம்.
ஆத்திரம் கொண்டு
அந்நியராக்கி அவரை
விரட்டி கலைத்திட
நடந்தது போரொன்று.
மனிதவுரிமை மீறல்கள்
பல கண்டு வெகுண்டு
வெஞ்சினம் கொண்டு
வல்லரசோடு மோதினார்.
ஈழவிடுதலை தன் வழி
தனித்து நடப்பதே
நாளை ஈழமண் மகிழ
வழியாகி போகும்.
அதனால் நடந்தது
சளைத்திடாத போர்
முடியாத போதும் அங்கே
முடியும் என்ற நம்பிக்கையோடு.
அந்த இக்கட்டில்
வேங்கையோடு பேசு
போரை நிறுத்தி நீயும்.
இந்த கோரிக்கையோடு
அன்னை பூபதி
அருந்திய நீரோடு
அருந்தாத உணவோடு
இருந்தார் நோன்பு.
19 பங்குனி தொடங்கி
19 சித்திரை முடிந்தது.
31 நாட்களில் அந்த
தாயவள் போராட்டம்.
அகிம்சை முறையில்
நிபந்தனை விதித்து
கொண்டார் போரொன்று.
விடுதலை போரை காத்திட.
அழிவின் விளிம்பில்
முடிவின் எல்லையில்
இருந்தது விடுதலை போர்
நெருக்கடி குறைத்திட வழி?
அறப்போர் ஒன்றே
ஈற்றில் ஒரு வழி
அழுத்தம் அது கொடுத்து
போகும் என்ற நம்பிக்கை.
ஈற்றில் தோற்றோம்
ஆயினும் காத்தோம்.
விடுதலைப் போராட்டம்
தொடர்ந்து துளிர்த்திட.
நதுநசி