செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனாதிபதி அநுர மே 3 ஆம் திகதி வியட்நாம் பயணம்!

ஜனாதிபதி அநுர மே 3 ஆம் திகதி வியட்நாம் பயணம்!

0 minutes read

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் மே 3 ஆம் திகதி வியட்நாமுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஐ.நா. வெசாக் தின விழா இம்முறை வியட்நாமில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்பார். 6 ஆம் திகதி வரை வியட்நாமில் தங்கி இருப்பார்.

இந்த விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More