செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சுமார் 35 வருடங்களின் பின் காங்கேசன்துறை – பலாலி பஸ் சேவை ஆரம்பம்!

சுமார் 35 வருடங்களின் பின் காங்கேசன்துறை – பலாலி பஸ் சேவை ஆரம்பம்!

0 minutes read

சுமார் 35 வருடங்களின் பின்னராகக் காங்கேசன்துறை – பலாலி இடையிலான அரச பஸ் சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாகக் காணப்பட்ட குறித்த பகுதியூடாகப் பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் காணப்பட்டது.

இதன் காரணமாக பயணிகள் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரை மாத்திரமே பயணம் செய்து வந்தனர்.

கடந்த 10ஆம் திகதி நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட பலாலி வீதி வரை இன்று பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

பஸ் சேவை நேர அட்டவணை தொடர்பாக பின்னர் அறியத்தரப்படும் என்று பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜா, இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ஜீவக புரசிங்க மற்றும் போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.