நாடாளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாங்களை நிறுவுதல் மற்றும் நடத்திச் செல்லல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அறிவுறுத்தலின்படி ஜனாதிபதி அலுவலகத்தால் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
25 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை தொடர்பில் அடுத்த கட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளதுடன், அதன்படி, குறித்த அறிக்கை இன்று சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.