“உண்மையான காதலைத் தேடும் சராசரி பெண் தான் நானும்” என்று ஸ்ருதி ஹாசன் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் நாக சைதன்யா, சித்தார்த், கிரிக்கெட் வீரர் ரெய்னா என மூன்று பிரபலங்களுடன் ஒவ்வொரு கட்டத்தில் காதலில் இருந்தவர் ஸ்ருதி ஹாசன்.
பிறகு லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கர்செலுடன் சேர்ந்து வாழ்ந்தார். பின்னர், அவரை பிரிந்த பிறகு டெட்டூ கலைஞர் சாந்தனு என்பவரை காதலித்தார். இருப்பினும், கருத்து வேறுபாட்டால் அவரையும் பிரிந்து விட்டார். சமீபத்தில் அவரது காரில் ஒருவர் இருந்ததாகவும் அவரே அவரது புது காதலர் என்றும் தகவல்கள் பரவியது.
இந்நிலையில் இது பற்றி ஸ்ருதிஹாசன் கூறும்போது, ‘‘இப்போது நான் சிங்கிளாக இருக்கிறேன். இதைச் சொன்னால் யாரும் நம்புவதில்லை. எனது காதலர்களின் எண்ணிக்கையை சொல்லி மக்கள் கேலி, கிண்டல் செய்கிறார்கள். கேள்வி கேட்கிறார்கள். ஆனால் இது எனக்கு பெரிய பிரச்சினை கிடையாது. இதனால் நான் கவலைப்படவில்லை. உண்மையான காதலை தேடும் சாதாரண பெண்ணாகவே என்னை நான் பார்க்கிறேன்”என்றார்.