கிழக்கு இலண்டனில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, Upton Lane, Forest Gate பகுதிக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், அங்கு துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலை உயிருக்கு ஆபத்தானது என்று நம்பப்படவில்லை.
அத்துடன், தலையில் காயங்களுடன் இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், சம்பவ இடத்திலிருந்து ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
“இன்று மதியம் ஒரு குடியிருப்புத் பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு உள்ளூர் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்” என்று இன்ஸ்பெக்டர் டேரில் ஜோன்ஸ் கூறினார்.
“சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குள் இரண்டு பேரைக் கைது செய்து ஒரு துப்பாக்கியை மீட்க முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
“எந்தவொரு குடியிருப்பாளரும் கவலைப்பட்டால், சம்பவ இடத்தில் உள்ள அதிகாரிகளிடமோ அல்லது உங்கள் உள்ளூர் காவல் குழுக்களிடமோ பேசுங்கள்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.