நடிகர் சந்தானத்தின் திரையுலக வாழ்க்கையில் வணிக ரீதியான வெற்றியையும், விமர்சன ரீதியான வெற்றியையும் ஒன்றாக பெற்ற ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் நான்காம் பாகமான ‘ டெவில்’ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்’ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ எனும் திரைப்படத்தில் சந்தானம், கீதிகா, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், மாறன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
திலீப் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். நகைச்சுவை, திகில் நிறைந்த இந்த திரைப்படத்தை, நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தை ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பிள்’ நிறுவனம் வழங்குகிறது.
எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் முன்னோட்டம், வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ஓரளவிற்கு சிரிப்பை வரவழைப்பதை உறுதி செய்திருப்பதால்.. படம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.