கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (2) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காஷ்மீர், பஹல்காமில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து “தீவிரவாதத்துக்கு எதிரான ஒரு அமைதி” என்ற தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்பொது அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
(படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார்)