2025ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் சிங்கப்பூரில் நேற்று (03) நடந்தது. இதில் மக்கள் செயல் கட்சி (PAP) 65.57 சதவீத வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கிடைத்த சதவீத 61.24 வாக்குகளுடன் ஒப்பிடுகையில், அது 4 சதவீத அதிகரிப்பாகும்.
இதனையடுத்து மக்கள் செயல் கட்சிக்கும் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கும் அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. சுமார் 60 ஆண்டாக அமெரிக்காவும் சிங்கப்பூரும் வலுவான உறவைக் கொண்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பொதுத்தேர்தலில் 2.63 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். அவர்களில் 92.47 சதவீத பேர் வாக்களித்ததாகத் தேர்தல் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
97 நாடாளுமன்ற இடங்களில் மக்கள் செயல் கட்சி 87 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மரீன் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் கட்சி போட்டியின்றி வெற்றி பெற்றது. பாட்டாளிக் கட்சி கடந்த தேர்தலைப் போலவே 10 இடங்களை வெற்றி பெற்றுள்ளது.
கட்சி ஹவ்காங் தனித்தொகுதி, செங்காங் குழுத்தொகுதி, அல்ஜூனிட் குழுத்தொகுதி ஆகியவற்றை தக்க வைத்துக்கொண்டது.