அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப், தாம்மை போப் ஆண்டவராக சித்தரித்து, போப் போன்று ஆடை அணிந்திருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவைக் (AI) கொண்டு, அப்புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் அவர் வெள்ளை ஆடை, கழுத்தில் திருச்சிலுவை ஆகியவற்றை அணிந்திருந்துள்ளார்.
அடுத்த போப்பாக தாம் விரும்புவதாக அண்மையில் செய்தியாளர்களிடம் விளையாட்டாக டிரம்ப் கூறியிருந்தார். அதன் பின்னர் குறிப்பிட்டு சொல்வதற்கு யாருமில்லை; நியூயார்க்கில் உள்ள ஒரு கார்டினல் சிறப்பானவர் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அடுத்த போப் ஆண்டவர், இம்மாதம் 7ஆம் திகதி தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.