கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கிஸை கடற்கரை வீதி சந்தியில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தெஹிவளை, ஓர்பன் பிளேஸ் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர், களுபோவிலவில் உள்ள கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.