நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமான படிப்பு படித்து வந்த நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார்.
இப்போது லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்காக சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா ஆகியோர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
கடந்த ஆண்டு இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் ஆண்டு இறுதியில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தற்போது இப்படத்தின் படபிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் படப்பிடிப்பு அடங்கிய காணொளி ஒன்றைப் படக்குழு வெளியிட்டிருந்தது.
அதில் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தோடு JSJ மீடியா எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அது ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனம்தானாம். லைகா புரொடகஷன்ஸ் நிதியளிக்க, இந்த படத்தை முதல் பிரதி அடிப்படையில் ஜேசன் சஞ்சய்யே தயாரிக்கிறாராம். அந்த வகையில்,
முதல் படத்திலேயே, இயக்குனர், தயாரிப்பாளர் என இரு முகங்களோடு அறிமுகமாகும் சஞ்சய்க்கு, இரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.