பசிக்கொரு பிள்ளை கதறுகிறது,
பக்கத்தில் பாய்ந்தது குண்டொன்றது.
கைபிடித்த அம்மா இல்லை –
கஞ்சிக்கிண்ணம் மட்டும் விழுந்திருந்தது.
அதிலொரு துளி அரிசி,
அதுவே ஆயிரம் கனவுகள்.
உணவா அது? உயிரா அது?
கண்ணீரில் கரைந்த உணர்வுகள்.
மூடி போன கண்கள் வெறித்தன,
பசியை மாட்டிச் சென்று விட்டது.
கஞ்சி சூடாக இருந்திருக்கலாம்,
ஆனால் அதில் இனம் சுட்டெரிந்தது.
மண்ணோடு கலந்து மாறியது,
மனதோடு கரைந்த கதையாயிற்று.
சூடான கஞ்சிக் கிண்ணம்,
சுடரான நினைவுப் பதாகை.
சாமானியமாய் தெரிந்த உணவிலும்,
சமூகத்தின் படுகாயம்.
முள்ளிவாய்க்கால் ஒரு இடம் அல்ல,
மக்களின் வலி பேசும் இகம்.
பிரசாத்
மூன்றாம் வருடம் – ஊடகத்துறை
யாழ் பல்கலைக்கழகம்