அமெரிக்க பொருட்களுக்கு முழுமையான வரிவிலக்கு அளிக்க இந்தியா தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க செய்தி நிறுவத்திற்கு நேற்று அளித்த பேட்டியின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
உலகிலேயே மிகவும் அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவுடன் வர்த்தகம் செய்வது இயலாத ஒன்று என்று கூறிய டிரம்ப், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் முழுமையாக வரிவிலக்கு அளிக்க இந்தியா தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும், அதில், தனக்கு எந்த அவசரமும் இல்லை என்றும், அனைவரும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகின்றனர் என்றும் அவர் டிரம்ப் தெரிவித்தார்.
இதேவேளை, எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும் இருநாட்டிற்கும் நன்மையை அளிக்கும் வகையில் இருக்கவேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்மை குறிப்பிடத்தக்கது.