பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாமர சம்பத் தசநாயக்க எம்.பி. இன்று காலை 9 மணியளவில் பதுளை நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
இதன்போது, நீதிவான் அவரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவைப் பிறப்பித்தார்.
2016 ஆம் ஆண்டில் ஊவா மாகாண முதலமைச்சராகப் பணியாற்றும்போது, முன்பள்ளி சிறுவர்களுக்குப் பைகள் வழங்க அரச வங்கியால் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபா பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்று சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.