இங்கிலாந்தைச் சேர்ந்த கென்ட்டன் கூல் என்பவர் எவரெஸ்ட் சிகரத்தில் அதிக முறை ஏறி சாதனை படைத்துள்ளார்.
தனது 51ஆவது வயதில், எவரெஸ்ட் சிகரத்தில் 19ஆவது முறையாக ஏறி அவர் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.
மலையேறி அல்லாத ஒருவர் மிக அதிகமான முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய பெருமை அவரைச் சேரும்.
நேற்று முன்னதினம் 8,849 மீட்டர் உயரத்தில் ஓங்கிநிற்கும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அவர் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன் நேபாளத்தைச் சேர்ந்த ஷெர்பா டொர்ஜி கியால்ஜென் சிகரம் தொட்டு தனது சொந்தச் சாதனையை முறியடித்திருக்கிறார்.
நேபாளத்தைச் சேர்ந்த ஷெர்பா, இதுவரை மிக ஆதிகமாக 30 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியிருக்கிறார். அவர் தமது சொந்தச் சாதனையை முறியடிக்க மீண்டும் இமய மலையில் ஏற முயன்றதாக Hindustan Times நாளேடு தெரிவித்தது.