பிரித்தானிய தமிழர்களை இலண்டனில் வைத்து கொலை மிரட்டல் சைகை செய்த சிறிலங்கா இராணுவ பிரிகேடியரை கைது செய்யவும், விசாரணையை மேற்கொள்ளவும், உடனே நாடு கடத்தும்படியும் அத்துடன் பிரித்தானியாவின் இலங்கை தொடர்பான உறவினை கண்டித்தும் இப் பேரணி தமிழர்களால் நடாத்தப்பட்டது.
பெருந்திரளான தமிழர்கள் கலந்து கொண்ட இக் கண்டன பேரணி கடும் குளிரின் மத்தியிலும் ஆவேசத்துடன் நடந்துள்ளது.
தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ் சொலிடாரிடி, தமிழர் ஒருங்கிணைப்பு குழு, நாடுகடந்த அரசாங்கம் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை இணைந்து இக் கண்டனப் பேரணியை ஒழுங்கு செய்துள்ளனர்.