சீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் ஒரு கார் வேகமாகச் சென்று மோதியதில் பலர் காயமடைந்தனர். விபத்து ஏட்படுத்திய காரில் இருந்து இறங்கிய ஒருவர் அங்கிருந்த மக்கள் மீது கத்தியால் சரமாரியாகக் குத்தி தாக்குதல் நடத்தினார்.
மக்கள் கூட்டத்தில் காரை மோதச்செய்ததுடன், கத்தியால் குத்தி 11 பேரைக் கொன்ற கொடூர குற்றவாளியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியாகினர். மேலும், 44 பேர் படுகாயமடைந்தனர்.
அந்த பகுதியில் இருந்த பொலிஸார் அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் யாங் ஷான்யுன் (54) என்றும், பல்வேறு குற்ற வழக்குகளில் பலமுறை சிறை சென்ற குற்றவாளி என்பதும் தெரியவந்தது.