சீனாவின் 162 கிலோமீற்றர் வேகத்தில் மன்குட் சூறாவளி வீசிவருகிறது அதிக சனத்தொகைக் கொண்ட மாகாணத்தின் கடந்த 2 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெறும் கடும் மழை காரணமாக பல நகரங்களில் 2 அடிக்கும் உயரமான மட்டத்தில் வெள்ளம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹொங்கொங்கை சூறாவளி தாக்கியதன் பின்னர் தற்போது அதியுச்சி அபாய நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகளின் பகுதிகள் சூறாவளியை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹொங்கொங்கில் காயமடைந்தவர்களின் எண்ணிகை 111 என பதிவாகியுள்ளது. இதேவேளை, பிலிபீஸ்சில் சூறாவளி காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 30இல் இருந்து 49 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாளான மரணங்கள் மண்சரிவினாலே ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, அமரிக்காவின் கிழக்கு கரையோர பகுதியை தாக்கிய ஃலோரன்ஸ் சூறாவளி காரணமாக 12 உயிர்கள் காவுக்கொள்ளப்பட்டுள்ளன.