கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழில் புதிதாக உருவாக்கப்பட்ட “மரபுரிமைகள் நிலையம்” இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.
அருகிப்போன எமது மூதாதையர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறை, அவர்களின் பாவனைப் பொருட்கள் பற்றி எமது இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், கௌரவ அமைச்சர் சர்வேஸ்வரன் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்விற்கு வருகை தந்த வட மாகாண முதலமைச்சர், குறித்த நிகழ்வில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
“வட கிழக்கு மாகாண தமிழர் தாயகம் நீண்ட ஒரு பாரம்பரியத்தைக் கொண்டது. அத்துடன் எமது வாழ்வியல் முறைகளில் அறிவியல் சார்ந்த தொழிநுட்பமும் ஆங்காங்கே காணப்பட்டன. எனினும் கால ஓட்டத்தில் மேலைத்தேய கலாச்சாரங்களை நாம் பின்பற்றத் தொடங்கியதால், எமது சந்ததி வழிவந்த அடையாளங்களை நாம் தொலைக்க முற்பட்டதாலும் இன்று எமது வாழ்வியல் அடையாளங்கள் எம்மைவிட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது.