முதலாவது வடமாகாண சபையின் இறுதி அமர்வில் கலந்து கொண்டிருக்கும் கௌரவ அவைத்தலைவர்
அவர்களேரூபவ் கௌரவ மாகாண சபை உறுப்பினர்களே!
முதலில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் என்னைப் பதவியில் இருக்க வைத்த இறைவனுக்கு நன்றி கூறக்
கடமைப்பட்டுள்ளேன். அடுத்து அரசியல் அனுபவம் இல்லாதிருந்த எனக்கு அந்த அனுபவத்தைத் தந்த
உங்கள் யாவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த அனுபவம்
வீண் போகாது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் 1987ஆம் ஆண்டு மாகாண சபை
நிர்வாகம் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டு 26 வருடங்களின் பின்னரே 2013 ஆம் ஆண்டில்
வடக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடந்த போது எமது மக்கள்
கொடிய யுத்தம் ஒன்றின் ஊடான இன அழிப்பைச் சந்தித்து மிகவும் பலவீனமான நிலையில்
இராணுவ நிர்வாகத்தின் கீழ் இருந்தார்கள். சொந்த பந்தங்களை இழந்துரூபவ் சொத்துக்களை இழந்துரூபவ்
நிர்க்கதியான நிலையில் இராணுவ அடக்கு முறையின் கீழேயே எமது மக்கள் இருந்து வந்தார்கள்.
தடை முகாம்கள் ஆங்காங்கே காணப்பட்டன. நாம் கூட்டங்கள் கூடிய போது இராணுவ உயர் அதிகாரி
ஒருவர் அங்கு வந்து மேடையில் அமர்ந்திருந்தார். இராணுவத்தினர் தேர்தல் நடவடிக்கைகளில்
தாமும் மூக்கை நுழைத்திருந்தார்கள். வெளிப்படையாக சில வேட்பாளர்களுக்கு அனுசரணையும் வழங்கி
இருந்தார்கள்.
எனினும் இணைந்த வடக்குக் கிழக்கில் எம்மை நாமே ஆளும் சுய நிர்ணய அடிப்படையில்
அதிகாரம் எமக்குப் பகிரப்பட வேண்டும் என்ற எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்றுக்கொண்டு
முழுமையாக எம்மை நம்பி எமக்கு பெருவாரியாக வாக்களித்து என்னையும் முதலமைச்சர்
ஆக்கினார்கள் எம் மக்கள்.
மக்கள் முன்வைத்து வாக்குகள் கேட்ட அந்த விஞ்ஞாபனத்தின் முக்கிய விடயமொன்றை இன்றைய இந்த
இறுதி உரையில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
‘தமிழ் மக்கள் ஒரு தனிச்சிறப்பு மிக்க தேசிய இனமாவர். புவியியல் ரீதியாக
பிணைக்கப்பட்டுள்ளதும் தமிழ்ப் பேசும் மக்களை பெரும்பான்மையினராகக்
கொண்டதுமான வடக்குரூபவ் கிழக்கு மாகாணங்களே தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்று
ரீதியான வாழ்விடமாகும். தமிழ்ப் பேசும் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு
உரித்துடையவர்கள். சமஷ்டிக் கட்டமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்டு இணைந்த வடக்குரூபவ்
கிழக்கு மாகாணங்கள் எனும் ஓர் அலகில் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் நிறுவப்பட
வேண்டும். அதிகாரப் பகிர்வானது காணிரூபவ் சட்டம் – ஒழுங்குரூபவ் சுகாதாரம்ரூபவ் கல்வி ஆகியன
உள்ளிட்ட சமூகப் பொருளாதார அபிவிருத்தி வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்கள்
ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்ரூஙரழவ்.
இந்த வாக்குறுதிகளுக்கு துரோகம் இழைக்காத வகையில் செயற்பட்டிருக்கின்றேன் என்ற திருப்தி
எனக்கு இருக்கின்றது. தமது துன்பங்களை ஒரு பொருட்டாகக் கருதாது பொருளாதார சலுகைகளுக்கும் அரை
குறை தீர்வுகளுக்கும் இடமளிக்காமல் மக்கள் இந்த கோட்பாடுகளுக்காக வழங்கிய ஆணையே எனது
அரசியல் மற்றும் பொருளாதார செயற்பாடுகளின் வழிகாட்டிகளாக இருந்து வந்திருக்கின்றன.
பல சவால்கள்ரூபவ் தடைகள் மற்றும் குழிபறிப்புக்களுக்கும் மத்தியில் என்னால் முடிந்தளவுக்கு
இந்தப் பாதை வழியே பயணம் செய்ய முடிந்திருக்கிறது.
தேர்தலில் வெற்றி பெற்றபின்னர் எமது மக்களின் துன்பங்களைத் துடைக்கக் கூடிய ஒரு
நல்லெண்ண முயற்சியாக இராணுவ அடக்குமுறையின் கீழ் எம் மக்களை வைத்திருந்த அப்போதைய
ஜனாதிபதி முன்பாக எனது பதவிப் பிரமாண உறுதி மொழியை எடுத்திருந்தேன். ஆனால்
அவர்கள் பக்கமிருந்து எந்தவித நல்லெண்ண நடவடிக்கை சமிக்ஞைகளும் கிடைக்கவில்லை. 2014ம்
ஆண்டு ஜனவரி 2ந் திகதி அப்போதைய ஜனாதிபதியைச் சந்தித்த போது எமது பல கோரிக்கைகளுக்கு
சாதகமாகத் தலையை ஆட்டி விட்டு அவை எவற்றையும் அவர் நிறைவேற்றி வைக்கவில்லை. மாறாக எமது
நிர்வாக செயற்பாடுகளுக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் அப்போதிருந்த இராணுவ
ஆளுநர் ஊடாக தடைகளே ஏற்படுத்தப்பட்டன. இருந்தபோதிலும் எமது மக்களின் துயர்களைத் துடைக்கும்
பணிகளை அதிகாரமற்ற மாகாண சபை ஊடாக மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் முடிந்தளவு
செய்துவந்தோம்.
புதிய ஆட்சி மாற்றத்தினூடாக எமது செயற்பாடுகளைச் செய்வதற்கு இடமளிக்கப்படும் என்றும்
எமக்கு ஒரு நன்மாற்றம் ஏற்படும் என்றும் நாங்கள் எண்ணியபோதும் அது நடைபெறவில்லை.
ரூசூ39;நல்லாட்சிரூசூ39; என்ற பலகைக்குள் ஒழிந்து நின்று அணுகுமுறைகளில் மாற்றத்தைக் காட்டினரே
தவிர நோக்கங்கள்ரூபவ் செயற்பாடுகளில் புதிய அரசாங்கத்தினர் மாற்றத்தைக் காட்டவில்லை.
முன்னைய ஆட்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளையே தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றனர்.
சில ஏக்கர் நிலங்களை இராணுவத்தினர் வசமிருந்து விடுவித்து சர்வதேச சமூகத்துக்குப் பறை
சாற்றிவிட்டு பல ஏக்கர் காணிகளை அபகரிக்குங் கைங்கரியந் தான் இன்று நடைபெற்று
வருகின்றது. அரச காணிகள் 60000 ஏக்கர்களுக்கு மேல் இராணுவத்தின் கைவசம் இருந்து வருகிறது.
இராணுவ பாதுகாப்புடன் சிங்கள குடியேற்றங்கள் ஒருபுறம் நடைபெறரூபவ் மறுபுறம் முழுமையாகத்
தமிழர் வாழும் இடங்களில் விகாரைகள் அமைக்கப்பட்டு பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள்
துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆளுநர் அடங்கலான அரச அலுவலர்கள் பலர் இவற்றிற்கு
ஆதரவு அளித்து வருகின்றார்கள். தெற்கிலிருந்து முதலீட்டாளர்களை இங்கு கொண்டு வரத்
துடியாய்த் துடிக்கின்றார்கள். எம் புலம்பெயர்ந்தோர் இங்கு வந்து முதலிடுவதை
வெறுக்கின்றார்கள்.
நல்லாட்சி என்ற பெயர்ப்பலகை அரசாங்கத்துக்கு சர்வதேசரீதியாக இருந்த நெருக்குவாரங்களைக்
களைவதற்கு பெரிதும் உதவியுள்ளது. சமஷ்டி என்ற பெயர்ப்பலகை தேவை இல்லை என்று கூறும்
எம்மவர்கள் பெயர்பலகைகள் மிகமிக முக்கியமானவையும் அவசியமானவையுங் கூட என்பதை இதன்மூலம்
புரிந்துகொள்ள வேண்டும். எமக்குச் சாதகமாகப் பெயர்ப்பலகைகள் அமையாவிடில் எமது உச்ச
நீதிமன்ற நீதியரசர்கள் ஒற்றையாட்சி என்ற கோட்டைத் தாண்டிப் பார்க்க மறுப்பார்கள்
என்பத