ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக பிரதமர் தெரேசா மே கொண்டு வந்த தீர்மானம் மூன்றாவது முறையாக தோல்வியடைந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் தீர்மானத்தின் மீது 2016 இல் இங்கிலாந்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் பிரெக்சிட் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தீர்மானம் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மார்ச் மாதத்திற்குள் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான விதிமுறைகள், நிபந்தனைகளைக் கொண்ட பிரெக்சிட் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.
பிரதமர் தெரேசா மே இதற்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வந்தார். ஆனால் இந்தத் தீர்மானம் மூன்றாவது முறையாக இங்கிலாந்து நாடாளுமனறத்தில் தோல்வி அடைந்தது.
மே 22 ஆம் திகதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற இருந்த நிலையில், தீர்மானங்கள் தொடர்ண்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்து வருவதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஏப்ரல் 12 ஆம் திகதிக்குள் பிரிட்டன் தெரிவிக்க வேண்டும்.
இந்த நிலையில், மீண்டும் பிரெக்சிட் தொடர்பான தீர்மானத்தைக் கொண்டுவர தெரேசா மே தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.